திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என மருத்துவமனை அறிக்கை

11 months ago
279 Views
201807311850178463_M-Karunanidhi-s-health-condition-remains-stable-Kauvery_SECVPF
சென்னை,
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்–அமைச்சருமான கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை பற்றி அகில இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் விசாரித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் ஆஸ்பத்திரியின் முன்பு குவிந்து உள்ளனர்.
காவேரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தம் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள். 29-ம் தேதி மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதால் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையினால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார். வயது காரணமாக அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. அவருடைய ரத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டும், இன்னும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Daily Thanthi
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title