ஜம்மு நகர் பஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 28 பேர் காயம்

6 months ago
471 Views
201903071449162012_At-least-28-injured-in-grenade-explosion-at-Jammu-bus-stand_SECVPF
ஸ்ரீநகர்.
புல்வாமா தாக்குதலுக்கு பின் பாலகோட்  ஜெய்ஷ் இ முகம்மது முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.  இந்நிலையில் ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில் காலை 11 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 28 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயம் அடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஆவர்.
குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதி போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் குறித்த முழு விவரங்களும் இன்னும்  வெளியாகவில்லை.
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title