காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா

4 years ago
1021 Views
Mehbooba

காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முப்தி பதவியேற்க உள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முஸாபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சையது(79) உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவை அம்மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தார் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

காஷ்மீர் முதல்வர் காலமானதைத் தொடர்ந்து அடுத்த முதல்வராக அவரது மகள் மெஹபூபா முப்தி பதவியேற்க உள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான முஸாபர் ஹுசைன் பெய்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இருப்பினும் மெஹபூபா முப்தி முதல்வராவது குறித்த முடிவுக்கு மாநிலத்தில் ஆட்சி கூட்டணியில் இருக்கும் பாஜக ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் 2014ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன.

பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.

எனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு, ஆயுதப் படை சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தன. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இரு கட்சிகளுக்கும் ஆட்சியை பங்குபோட்டுக் கொண்டன.

காஷ்மீரின் துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங் பதவி வகிக்கிறார். முதல்வர் முப்தி முகமது சையது மறைவுக்கு பின்னர் அடுத்த முதல்வர் குறித்து மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் இணைந்து முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title