கேரளா மதமாற்றம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள தயார் – தேசிய புலனாய்வு பிரிவு

2 years ago
352 Views
201712011445325206_NIA-ready-to-probe-conversion_SECVPF
திருவனந்தபுரம்,
குஜராத்தை சேர்ந்த கேரள பெண் தான் இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
குஜராத்தை சேர்ந்த 25 வயது கேரள பெண் தான் இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக  இளைஞருடன் திருமணம் நடைபெற்றது எனவும் அவர் இப்போது தன்னை ஒரு பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் தன்னை விற்பனை செய்த முயற்சிக்கிறார் எனவும் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடைபெற்ற போது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை முன்னெடுக்க தயார் என விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஐகோர்ட்டு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டால் விசாரணையை முன்னெடுக்க நாங்கள் தயார் என தேசிய புலானாய்வு பிரிவின் ஆலோசகர் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளார். மதமாற்றம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என இந்து பெண் தாக்கல் செய்த ரிட் மனுவின் தொடர்பான விசாரணையின் போது கோர்ட்டில் தேசிய புலனாய்வு பிரிவு தன்னுடைய விருப்பத்தை பதிவுசெய்து உள்ளது. ஹாதியா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை முன்னெடுத்தது.
தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு ஒன்றில் விசாரணையை முன்னெடுக்க குறிப்பிட்ட விதிமுறைகளை தேசிய புலனாய்வு பிரிவு சட்டம் கொண்டு உள்ளது. விதிமுறைகளின்படி தேசிய புலனாய்வு பிரிவு சட்டத்தின் கீழ் குற்றம் வகைப்படுத்தப்பட்டு அதற்கான பரிந்துரையை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். மத்திய அரசு குற்றம் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ளும் பிரிவின் கீழ் வருகிறதா? தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணை அவசியமானதா? என முடிவு எடுக்கும். மத்திய அரசு தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடலாம். தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டாலும் விசாரணையை முன்னெடுக்கலாம்.
Source – Daily Thanthi
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title