5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி

6 months ago
434 Views
201905171841002356_Modi-shows-up-at-his-first-press-conference-in-five-years_SECVPF
2019 தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7–வது மற்றும் இறுதிக்கட்டமாக 50 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது. பிரசாரம் முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி பா.ஜனதா தலைமையகத்தில் அமித்ஷாவுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சம்பவம் இதுவாகும். ஆனால் பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் எதையும் அவர் எதிர்க்கொள்ளவில்லை. அமித்ஷாவால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது எனவே எந்தஒரு கேள்வியையும் எதிர்க்கொள்ளப்போவது கிடையாது, பா.ஜனதாவின் விதிகளின்படி ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும். அமித்ஷா உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார் எனக் கூறிவிட்டார்.
Source : Daily Thanthi
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title