”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு

6 months ago
277 Views
Nitin-Gadkaris-Direct-Attack-On-PM-Tweets-Congress-Over_SECVPF
புதுடெல்லி,
மராட்டிய  மாநிலம் புனேவில் நேற்று  பிம்ப்ரி சின்ச்வாட் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “எங்களுக்கு சாதியின் மீது நம்பிக்கை இல்லை. உங்கள் ஊரில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் என்னிடம் சாதி பற்றி பேசுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்.
சாதியின் அடிப்படையில் பாகுபாடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தை சாதி, மதவாதமற்ற சமூகமாக உருவாக்க வேண்டும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடும், உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பிரிவினைவாதமும் சமூகத்தில் இருக்கக்கூடாது. ஏழைகளுக்கு தாராளமாக உதவுங்கள். ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் தர வேண்டும். ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்கு சேவை செய்வதற்குச் சமம்” எனப் பேசினார்.
நிதின் கட்காரியின் இந்த பேச்சை மேற்கோள் காட்டியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ், நிதின் கட்காரி பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியைத்தான் விமர்சித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ”நிதின் கட்காரி மீண்டும் மோடியையும்,  பாஜகவையும் நேரடியாக விமர்சித்துள்ளார். பாஜக பின்பற்றும்  சாதி அரசியலுக்கு எதிராக கட்காரி பேசியுள்ளார். ஹனுமன் பெயரை பயன்படுத்தி சமீபத்தில் ஓட்டு கேட்டவர்களை எப்போது தாக்க போகிறீர்கள்?” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கடவுள் ஹனுமன் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர் எனவும்  மனுவாதிகளுக்கு அடிமையாக இருந்தார் எனவும் பாஜக எம்.பி சாவித்ரி பாய் புலே கூறியிருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இவரை தவிர பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் பலரும் இதே போன்ற கருத்தை கூறியதை வைத்து காங்கிரஸ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது.
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title