குளிர்கால அழகு குறிப்புகள்

4 years ago
615 Views
winter_dry
சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையை  பொறுத்து மட்டும் அல்ல, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது தான். முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உதவுகிறது.
அதிலும் குறிப்பாக,சருமத்தின்    ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை  கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன. மேலும் தினமும் குறைந்தது 3   லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பாதுகாக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவு அல்லது  பயத்தம் மாவை பயன்படுத்தலாம்.
* குளிர் காலத்தில் தோல் வறண்டு  போகாமல் தடுக்க குளிக்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
* குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.
* குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.
* குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title